Saturday 5 January 2013

My Husband's voice

என் கணவரின் குரலில் சில பாடல்கள்


கும்கியில் இருந்து"அய்யய்யயோ ஆனந்தமே"

http://f.cl.ly/items/1h1D0K203P311v0r2R3c/My%20Song_001.mp3


 கும்கியில் இருந்து  "ஒண்ணும் புரியல "


http://f.cl.ly/items/2o2W0i2C0B3R3F13352w/Onnum%20Puriyala.mp3

கும்கியில் இருந்து "சொல்லிட்டாளே"


http://f.cl.ly/items/012k051L2k441B1q1s2l/Sollitaaley%20New.mp3


காதல் கவிதைகள்..
http://f.cl.ly/items/2R2e3m0P2u1V1e0Y3A0Q/Kaadhal%20kavidhaigal_001.mp3


தங்கள் மேலான விமர்சனங்களை எதிர்நோக்கி...

Monday 12 November 2012

Junior MasterChef Australia


   சின்ன குழந்தைகள் மற்ற நாட்டில் எப்படி இருக்காங்க என்பதை Star world-ல் Junior MasterChef Australia என்ற நிகழ்ச்சியில் பார்த்தேன்… அந்த சின்ன குழந்தைகளுக்கு எல்லாம் 12 அல்லது 13 வயது தான் இருக்கும்… அந்த வயதில் நமக்குல்லாம் வெந்நீர் போடக் கூட தெரியாது….அவங்க என்னமா சமைக்குறாங்க தெரியுமா… பார்த்துட்டு ரொம்ப அசந்துட்டேன்… அவங்களுக்கு குடுக்கப்பட்ட ingredient white chocolate and strawberry.. அதை வைத்து ஒரு dessert 80 நிமிஷத்தில் பண்ணவேண்டும்… கலக்குறாங்க பா…என்ன ஒரு creativity அழகா படைக்குறாங்க நடுவர்கள் முன்னாடி…

கறை நல்லது



 Surf Excel க்கு வரும் விளம்பரம்… அதை பார்த்தால் கோபமாக வருகிறது..கறை நல்லதுன்னா அழுக்கு,கிருமி எல்லாம் நல்லதா?
சட்டையில் கறை படிஞ்சா துவைச்சுக்கலாம்.. சட்டையில்,உடம்பில் இருக்கும் சகதி,சேறு போன்றவற்றால் உருவாகும் கிருமி உண்டாக்கும் நோய் வந்தால் Surf Excel குணமாக்கிடுமா?

இதில் வேற “அன்புக்கு எல்லோரும் பயப்படுறாங்கடா…” னு சொல்லுறான் ஒரு பையன்..…

Friday 14 September 2012

ஞாபகங்கள்


ஞாபகங்கள்
இது பள்ளிப்படிப்பு படிச்ச எல்லோருக்கும் இருக்குற ஞாபகங்கள் தான்….”இதெல்லாம் நம்ம வாழ்க்கையிலும் நடந்துருக்கு-ல” னு நினைக்க வைக்குற விஷயங்களை தான் இங்கே நினைவு கூறுகிறேன்..

அப்பலாம் L.K.G-ல இருந்து தான் பள்ளி வாழ்க்கை ஆரம்பிக்கும். Pre.K.G , Play School எல்லாம் கிடையாது… L.K.G-ல முதல் நாள் அம்மா கை பிடித்து “வேணாம் வேணாம் School வேணாம்” னு அழுதது.. கொஞ்ச நாள் போனதும் “எம்புள்ள சமத்தா, நல்ல பிள்ளையா அழாம போனான் பள்ளிக்கு” னு நம்ம அம்மா பெருமையா எல்லோரிடமும் சொன்னது..

முதல்ல நம்ம கையால சிறிய கரும்பலகையில் (சிலேட்) சாக்பீஸ் வெச்சு அ,ஆ எழுதினது..

(Rhymes) “Baa Baa Black Sheep…”,”அணிலும் ஆடும் அ,ஆ வாம்..” கோரசாக பாடினது….
(எல்லா ஆங்கில (Rhymes).க்கும் என் பையனுக்கு சொல்லிக்கொடுக்கும் போது தான் அர்த்தமே தெரியுது)

அப்புறம் சிலேட்,சாக்பீஸ்-ல இருந்து Note,Pencilக்கு ஒரு Promotion..
வருஷம் போக போக Promotion ஆகிக்கிட்டே போகும்… 4 கோடு போட்ட நோட்டு,2 கோடு போட்ட நோட்டு,1 கோடு அப்புறம் கோடே இருக்காது…

[பின்குறிப்பு:---என் பையனுக்கு Play School-க்கு மாதம் 1000 ருபாய்!!!! நான் படிக்கும் போது L.K.G ,U.K.G வகுப்புகளுக்கு 50 ரூபாயும், 1 வகுப்பு முதல் 5 வகுப்பு வரையும் மாதம் 100 ரூபாய் தான்….]



நட்ராஜ் பென்சில்(pencil),ரப்பர்,sharpener,15 அடி ஸ்கேல்(scale) எல்லாத்தையும் வைக்க ஒரு குட்டி box…
புதிய புத்தக வாசனை… புது புத்தகம் தந்த உடனே நண்பர்களோட  பக்கம் விளையாட்டு விளையாடினது…(வலதுப் பக்கம்  ,இடதுப்பக்கம் யாரு யாருக்குனு முடிவுப் பண்ணினதும் எந்த பக்கத்துல படம் வருதோ அவுங்களுக்கு ஒரு புள்ளி(point) யாருக்கு நிறைய படம் வருதோ அவங்க வெற்றி பெற்றதாக அர்த்தம்(winner))







தீண்டாமை  பெருங்குற்றம்
தீண்டாமை  மனிதநேயமற்ற செயல்

என்பதை

அரையாண்டு பெருங்குற்றம்
முழுவாண்டு மனிதநேயமற்ற செயல் 

என்று எழுதியது…

சிறு வயதாக இருக்கும் போது பென்சில்(pencil) அடிக்கடி தொலைச்சுடுவோம் னு அப்பா என்ன பண்ணுவாங்க ஒரு pencil-ல இரண்டாக வெட்டி உபயோகப்படுத்த சொல்லுவாங்க…

Ink pen use பண்ணும் போது வெள்ளை நிற சட்டை எல்லாம் ink கறை பிடிக்கும் அத பாத்துட்டு அம்மா ரொம்ப திட்டுவாங்க..(பாவம் அவுங்க தான கஷ்டப்பட்டு துவைக்குறாங்க)..

எழுத்துக்கள் நல்லா இருக்குனு ஆசிரியரிடம் பாராட்டு வாங்கினது good,v.v.good, star...rank report, அதுல வகுப்பு ஆசிரியர் gold,silver,brown or red வட்டவடிவ காகித துண்டு(circle paper)யை ஒட்டி வைப்பாங்க ..
Gold-னா முதல் ராங்க்….(first rank), silver-னா இரண்டாம் ராங்க் ….(second rank), brown-னா மூன்றாம் ராங்க் (third rank) மற்றும் red-னா  
ஃபெயில் மார்க்
Fail மதிப்பெண்ணுக்கடியில் கோடு போட்டு விட்டுருவாங்க…

வருஷா வருஷம் பள்ளி ஆண்டு விழா,விளையாட்டு தினம் எல்லாம் வரும்… நம்ம அதுலல்லாம் கலந்துருக்கோமோ இல்லையோ, அந்த நாள் பள்ளிக்கு விடுமுறை.. அதனால ரொம்ப சந்தோஷப்படுவோம்… ஆண்டு விழாவிலும் விளையாட்டு போட்டிகளுக்காகவும் selection நடக்கும்… நம்ம எதுலயாவுது கலந்துக்கணும்-னு மனசு துடிக்கும்.. 2 காரணங்களுக்காக கலந்துக்க ஆசைப்படுவோம்
1.எல்லோராலும் நாம் அறியப்படுவோம்
2.நிறைய வகுப்பை கட்(cut) அடிக்கலாம் practice என்ற பெயரால்…

அப்புறம் சின்ன நோட்டு  பெரிய நோட்டாகும்(small size note, long size note ) ஆறாம் வகுப்பு-ல geometry box வந்து சேரும்.
சுதந்திர தினம் ,குடியரசு தினம் அப்பலாம் வா.உ.சி ground-ல போயி perform பண்ணுவோம்..பள்ளி வாழ்க்கையிலயே மறக்க முடியாத காமெடி அங்கதான் நடக்கும்..

மற்றவர்கள் மீது ink தெளிக்குற நாள் ஒன்று இருக்குமே ம்ம்ம்ம்…. அது என்ன நாள்..? ஆங்…அதான் (April fool’s day)..முட்டாள்கள் தினம் அவ்வளவு தான் நம்ம துணி.. வெள்ளை சட்டையெல்லாம் வண்ண சட்டை ஆகிடும் … பெண்கள்-லாம் என்ன பண்ணுவாங்க-னா அந்த இரட்டை சடையில் உள்ள முடிச்சை அவிழ்த்து விட்டுருவாங்க… காமெடியா இருக்கும்…..(அதுக்கு சிடுமூஞ்சிகள் சிலபேர் கோச்சிக்க வேற செய்வாங்க)…

உடற்பயிற்சி வகுப்பு(P.T class) னு ஒண்ணு இருக்கும். அதுல விளையாடுறோமோ இல்லையோ உக்காந்து அரட்டை தான் அடிப்போம்… ஆசிரியரிடம் ஆர்வக்கோளாருல விளையாட வேண்டும் பந்து தாங்க,மட்டை தாங்க னு கேட்டாலும் தரமாட்டாங்க… அதையெல்லாம் நாங்க உடைச்சிடுவோமாம்… “அப்புறம் யாரு தலைமை ஆசிரியரிடம் பதில் சொல்லுவா” னு சொல்லுவாங்க நம்ம கிட்ட…

கூட்டு சேர்த்துக்குவோம் (group forming).. அதுக்கு ஒரு பெயர் வேற
(3 roses,5star,மு.பெ.தே….)

9ஆம்,10ஆம் வகுப்புல கூடுதலா இரண்டு பாடங்கள்… Englishயும், தமிழையும் பிரிச்சி English-1,English-2,தமிழ்-1 தமிழ்-2 னு…
(ஒண்ணா இருந்தாலே படிச்சு கிழிச்சுருவோம் இதுல இரண்டு வேற)
10 ஆம் வகுப்பு மதிப்பெண் வரும் நாள் (யாராலயும் அந்த நாளை மறக்க முடியாது)..

11ஆம் வகுப்பு-ல History(STD னா வரலாறு தான J)கிடையாது..
வெவ்வேறு விதமான குரூப்(Group) இருக்கும்.. அத 100-ல 80 சதவிகிதம் மாணவர்கள் சரியாக தேர்தெடுப்பது இல்லை…

Record Note
அதுல இந்த ஜெல் பென்(Gel Pen) வச்சிதான் எழுதணுமாம் (பெட்ரோமாஸ் லைட்டே தான் வேணுமாம் ) 50 மதிப்பெண் அதுலயே கிடைச்சுரும்…ஆனால் அதை வாங்க இந்த ஆசிரியர்கள் நம்மல அலைய விடுவாங்களே.. யப்பப்பா இன்னும் அதை நினைச்சா கால்-லாம் வலிக்குது..



11ஆம் வகுப்பு சந்தோஷமா போகும் ஆனால் 12ஆம் வகுப்பு அப்படி இல்லை படிக்கணும் படிக்கணும் படிச்சுக்கிட்டே இருக்கணும்..

Night studies-னு வைப்பாங்க.. (மாணவர்கள் எல்லோரும் பாவம்  relax பண்ண நேரமே இல்லனு இந்த Night studies-அ நமக்காக ஒதுக்கிருக்காங்க)

பள்ளி வாழ்க்கையில் படிக்குறத தவிர நிறைய விஷயங்கள கத்துக்குவோம்…(தன்னம்பிக்கை,ஞாபக சக்தி, கீழ்ப்படிதல் இத மாதிரி பெரிய பெரிய விஷயங்கள் இல்லங்க…. பலமொழி, வரைதல் like இரண்டு முட்டையில் பறவை வரையுறது, எண்களில் இருந்து வாத்து வரையுறது...rubber band-ல இருந்து பல வடிவங்கள் வர்ற மாதிரி பண்ணுவது.. இத மாதிரி காமெடியான விஷயங்கள்…

12ஆம் வகுப்பு படிக்கும் போது எப்படா முடிப்போம்  இந்த பள்ளியவிட்டா போதும் படி படி னு உயிரை வாங்கிட்டாங்க எப்படா காலேஜ் போவோம் என்ஜாய்(enjoy) பண்ணுவோம்-னு தோணும்..
ஆனா college வந்துட்டா பள்ளி வாழ்க்கை(school life) தான்  சிறந்தது-னு தோணும்..


Wednesday 29 August 2012

கணவன் மனைவி சண்டைகள்-பகுதி 2

                                கணவன் மனைவி சண்டைகள்-பகுதி 2





இந்த கணவன்மார்கள் மாதிரி பெண்களுக்கு சாமர்த்தியம் பத்தாது... எந்த விஷயத்தில-னு கேட்கிறிங்களா… அதாங்க மனைவிமார்களோட குடும்பத்தைக் கிண்டல் அடிக்கிறதுல…
அவங்களுக்கு இது அல்வா சாப்பிடுறது மாதிரி…

பெண்கள் எவ்வளவு try பண்ணாலும் அது வரவே வராது…
ஆனா பெண்கள்கிட்ட ஒரு பெரிய ஆயுதம் இருக்குதுங்க.அதான்
DAM-அ தொறந்து விட்டுருவோம்…

சண்டையில் எவ்வளவு சமாளிக்க முடியுமோ அவ்வளவு சமாளிப்போம்… ஆனா ரொம்ப நேரம் எங்களால தாக்கு புடிக்க முடியலனா… இரண்டு கண்களிலும் அருவி தான்...அத பார்த்துட்டு கணவன்மார்களால்  தாங்க முடியுமா…? உடனே சமாதான புறா தான்…


முக்கால்வாசி சண்டைகள் வருவதற்கு காரணம் இந்த ஆண்கள்
மனைவிடம் கூறும் இந்த மாதிரி வார்த்தைகள் தான் “அந்த பொண்ணு சூப்பரா இருக்காள்-ல” , “T.V- ல வர்ற பொண்ண் பாரு எவ்வளோ அழகா இருக்கா” , “அவ lips, dress அழகா இருக்கு” , “எங்க office-ல ஒரு பொண்ணு புதுசா join பண்ணிருக்கா செமையா இருக்கா” இப்படியே வெறுப்பேத்தி  வெறுப்பேத்தி ரசிப்பாங்க….

சில பெண்களுக்கு தெரியும் கண்ணீர் என்பது precious thing-னு…தேவைக்கேற்ப தான் அத use பண்ணனும்-னு…


Friday 17 August 2012

கணவன் மனைவி சண்டைகள்


கணவன் மனைவி சண்டைகள்



தலைப்பு வைத்தே ஒரு சண்டை புடிப்போம்-ல( இது தான்ங்க நம்ம திருநெல்வேலி பாசை)
அது என்ன “கணவன் –மனைவி சண்டைகள்”...... ஏன்? “மனைவி –கணவன் சண்டைகள் “னு வைக்க கூடாதா? இங்கேயும் ஆண்தான் உசத்தினு காட்டணுமா?

இப்படி எதுக்கு எடுத்தாலும் சண்டை உருவாக்கி சண்டை புடிப்பாங்க இந்த கணவனும் மனைவியும்..அர்த்தமே இருக்காது…

இங்க நான் எழுத விரும்புவது  court போற சண்டைகள் இல்லங்க
Love-வால உருவாகுற சண்டைகள் பத்தினது..

இந்த பெண்கள் இருக்காங்களே சரியான ஆளுங்க.. ஒரு சண்டை வந்தாபோதும் அதுல நம்ம மேலதான் தப்பு-னு தெரிஞ்சா போதும் அவ்வளவு தான் அத அப்படியே கணவன் பக்கம் திருப்பி விட்டுருவாங்க… எப்படி-னு கேட்கிறீங்களா..?
பெண்கள் ஏதோ ஒரு விஷயத்தை வைத்து அவுங்க  மேல கோபப்பட்டுட்டாங்கன்னு வைங்க.... அப்புறம் தான் தெரியவருது கணவன் மேல எந்த தப்பும் இல்லைனு.. தெரியாம கோபப்பட்டு பேசிட்டோம்-னு தெரிஞ்சும் அத ஏத்துக்கமாட்டாங்க.... எப்படா நேரம் வரும்-னு பார்த்துட்டே இருப்பாங்க திருப்பி விட..
அப்பதான் அந்த கணவன் சும்மா இல்லாம ஏதாவது பேசிடுவான் கோபத்துல…
அது போதுமே பெண்களுக்கு நம்ம செஞ்சது பெருசு இல்ல இப்ப இவன் சொன்னது தான் தப்புனு  தைய்யா தக்கா-னு குதிச்சு ஆர்ப்பாட்டம் பண்ணி பெருசாக்கி கடைசில கணவன “SORRY“ கேட்க வச்சுருவாங்க….
இதுல பெண்கள் கில்லாடிகள்!!!!!
அதனால ஆண்கள் மட்டும் ரொம்ப ரொக்கம் இல்ல..
மனைவிய எப்படி மடக்கணுமோ அப்படி மடக்கிருவாங்க…
இரண்டு பேரும் சண்டைபோட்டு பேசாம இருக்காங்க 2 நாட்கள் போகுது…
கணவன் அதே கோபத்துல இருக்கான் ஆனா மனைவி வந்து சமாதானப்படுத்த வர்றாள்… அது முடியாத காரியம் மசியமாட்டாங்க இந்த ஆண்கள்….
அதே இது மனைவி கோபமா இருந்து கணவன் சமாதான படுத்தினா எங்க தான் போகுமோ அந்த கோபம் எப்படிதான் மயக்குவாங்ளோ… அப்ப ஒரு கேள்வி கேட்பாங்களே பாக்கணும்
“என் மனைவி கிட்ட நான் கோப பட உரிமையில்லையா இதபோயி பெருசா எடுக்குற”….

அவ்வளவுதான்!!!.. 

(சண்டைகள் தொடரும்....)

Tuesday 31 July 2012

என் த(தோ)னிக் கதை !!!


தோனி படம் பார்த்துவிட்டு எனக்கு ஒரு கதை எழுதலாம் என்று தோன்றியது. இது எனது தனிக் கதை !!!!

ஒரு சிறு கிராமம். அதில் ஒரு சின்ன ஆங்கில மேல் நிலை பள்ளி(???!!!!)யில் தான் நான் படித்தேன் normal student or low average student என்றும் சொல்லலாம்.

எனக்கு என்ன திறமை(talent) இருக்கிறது என்று தேட ஆரம்பித்த வயது
But நம்ம நாட்டு-ல உள்ள education system பத்தி தான் உங்களுக்கு தான் தெரியுமே

எப்படியாவது Pass mark வாங்கணும்…. 40 marks !!! எனக்கு ரொம்ப கஷ்டம் அது…

காலையில் பரிட்சை, மதியம் நம்முன் தான் பேப்பர் திருத்தும் படலம். அப்பதானே எல்லார் முன்னாடியும் பசங்கள திட்டி கேவலப்படுத்த முடியும் ….

“ஆண்டவனே! எப்படியாவது 40 marks வரட்டும், நாலணா தைக்கா க்கு போடுறேன்”னு எல்லாம் வேண்டியிருக்கேன்…..
But 38(? பிங்கோ….) தான் வரும். பேப்பர திருப்பி திருப்பி பார்த்தாலும் 2 mark கிடைக்காது.
(கஷ்ட காலம்டா அது)

அப்புறம் என்ன 2nd std போகணும், 3rd std போகணும்….ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்பா… பெரும் போரே நடக்கும்.

விக்டோரியா மிஸ்-னு ஒரு தங்கமான டீச்சர் இருந்தாங்க. நான் 1st std படிச்சிக்கிட்டு இருந்தப்ப எங்க அண்ணன் 5th std. அந்த ஆசிரியர் என்னை கூப்பிட்டு எங்க அண்ணன் வகுப்பறையில் வைத்து என் காதை அந்த ஊசியான நகத்தால் கிள்ளி என்னை அப்படியே தூக்கி
“உன் அண்ணனை பார்  எப்படி படிக்கிறான் உனக்கு என்ன வந்தது (எப்ப.. 1st std-ல)”னு கேவலப்படுத்தின அறை-யை என்னால் இன்னும் மறக்க முடியாது.

4th ,5th அந்த அளவுக்கு இல்லை, நகர்ப்புறம்  வந்து விட்டேன். ஒரு சின்ன பள்ளியில் சேர்ந்தேன். என் வகுப்பில் மொத்தமே ஐந்து பேர் தான். இரண்டு வருஷம் என்னால் மறக்க முடியாது ரொம்ப சந்தோஷமான காலம்.

அது ஏன்னா நான் தான் 2nd rank (ha ha ha..அப்பயும் 2nd தான் 1st வரல  J) . டான்ஸ் ஆடுவேன், விளையாடுவேன் super-ஆ இருக்கும் யாரும் என்ன கண்டுக்க மாட்டாங்க ,திட்டமாட்டாங்க.
Free Bird-னு சொல்லுவாங்களே அதே போல்………

… அதுவும் ரொம்ப காலத்துக்கு நீடிக்கல…
6   ஆம்  வகுப்பு      (பழய பள்ளியில் 6-12 இல்ல)
ரொம்ப மோசமான நெலமை அப்பதான்… சின்ன பள்ளியில படிச்சதுனால படிப்பு-னா என்னனு தெரியாம இருந்த காலம் அது. பெரிய subject பெரிய lessons எல்லாத்தயும் மனப்பாடம் பண்ணனுமாம் ரொம்ப ரொம்ப கஷ்டமா இருந்தது(very bad!!!)
 7-வது வகுப்புல பரவாயில்லாம படிக்க ஆரம்பிச்சென்.. போக போக புரிஞ்சிக்கிட்டேன்..... படிப்பை பத்தி இல்லைங்க..  mark எடுக்க மனப்பாடம் தான் நல்ல வழினு…
Pass …Very good..(mmmmmmmmmmMMM)

10th -ல 439/500 12th -ல 1011/1200
Engineering- I am a Computer Engineer ...
ஆனா Engineering படிக்க எனக்கு தகுதி இல்லனு எனக்கு ரொம்ப நல்லா தெரியும்…..என்ன பண்ண அப்பா சொன்னாங்க "மூத்த பசங்கள Engineering படிக்க வச்சிட்டேன் உன்ன படிக்க வைக்கலனா நாளைக்கு நீ கேட்ப” பசங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் குடுக்குறீங்க”" னு

படிச்சி முடிச்சாச்சு Engineering M.Sameema B.E with 72%
That is 1st class –ல
படிச்ச படிப்பு எதுக்கு உதவுதோ இல்லையோ ….. மாப்பிள்ளை
அமைய & பத்திரிகையில மணப்பெண் சமிமா B.E னு போட உதவுது…
படிச்சி முடிக்கவும் கல்யாணம்….
கல்யாணம் முடிஞ்சு 3 வருசம் ஆகுது. 2 வயது பையன் இருக்கான்..இன்னும் தேடிட்டு தான் இருக்கேன் எனக்குள்ள என்ன talent இருக்குனு தெரியல...?
தேட வேண்டிய காலத்தை எல்லாம் கழிச்சிட்டேன் mark எடுக்கவேண்டும் என்றதால்...